close
Choose your channels

30 வருடங்களுக்கு முந்தைய ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசை: தனுஷ்!

Monday, January 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த் நடித்த பில்லா உள்பட ஒரு சில திரைப்படங்கள் ஏற்கனவே ரீமேக்காகி வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது 30 வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்த ஒரு படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை என்று பிரபல நடிகரும் ரஜினியின் மருமகனான தனுஷ் ஒரு பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1981-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த திரைப்படம் ’நெற்றிக்கண்’. இந்த படத்தில் தந்தை கேரக்டரில் நடித்த ரஜினிகாந்த் கேரக்டர் நெகட்டிவ்வாக இருக்கும். இந்த கேரக்டர் ரஜினிக்கு நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தி இருந்தாலும் ரஜினிக்கு பெரும் பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்தது.

இந்த நிலையில் 30 வருடங்களுக்கு பின் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை என நடிகர் தனுஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தனுஷ் விருப்பப்படி இந்த படம் ரீமேக் செய்யப்பட்டால் அந்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.