முன்னணி நடிகருடன் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்… வைரல் புகைப்படம்!

பேட்ட படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார். இதனால் தற்போது மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாவிலும் மாளவிகாவை ரசிகர்கள் பின்தொடர ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் முன்னணி நடிகர் தனுஷ்ஷுடன் இவர் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி இருக்கிறது. நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இதில் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ்ஷுடன் மாளவிகா புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

அதில் மார்டன் லுக்கில் இருக்கும் மாளவிகா நடிகர் தனுஷ்ஷுடன் சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை மாளவிகா மோகனன் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் இயக்குநர் ரவி உதாய்வர் இயக்கும் புதிய ஹிந்தி படம் ஒன்றில் சித்தான்த் சதுர்வேதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.