close
Choose your channels

யோகிபாபுவின் 'தர்மபிரபு' சென்சார் தகவல்கள்!

Tuesday, June 18, 2019 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு, ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார். அவ்வாறு அவர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் படங்களில் ஒன்று 'தர்மபிரபு'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து சமீபத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர்.  இதனையடுத்து இந்த படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்துகுமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz