close
Choose your channels

யோகிபாபுவின் 'தர்மபிரபு' இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

Wednesday, May 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு முதல்முறையாக முன்னணி வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தர்மபிரபு. எமதர்மராஜா மகனாக யோகிபாபு நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'தர்மபிரபு' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்காக கம்போஸ் செய்த பாடல்கள் இந்த படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து விரைவில் பட ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

யோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை முத்துகுமரன் இயக்கி வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.