close
Choose your channels

யோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்

Tuesday, June 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு தற்போது ஒருசில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவ்வாறு அவர் நடித்து வந்த படங்களில் ஒன்று 'தர்மபிரபு'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது

இந்த படத்தின் சென்சார் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 146 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 26 நிமிடங்கள் என தெரிய வந்துள்ளது.

யோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.