'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 19 2017]

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் படக்குழுவினர் இதுவரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை பேசாதே' பாடலின் டீசர் வெளியானபோது கூட இசையமைப்பாளர் மிஸ்டர் எக்ஸ் என்றே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் கவுதம்மேனனின் டுவிட்டரில் 'மறுவார்த்தை பேசாதே' படத்தின் முழுப்பாடலின் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் இறுதியில் இந்த பாடலை கம்போஸ் செய்தது தர்புகா சிவா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தர்புகா சிவா ஏற்கனவே சசிகுமாரின் 'கிடாரி' மற்றும் 'பலே வெள்ளைத்தேவா' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. ஜாமோன் ஜான் ஒளிப்பதிவில் ப்ரவீன் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

என்னை போலவே பிரதமரும் மன்னிப்பு கேட்க வேண்டும்: கமல்ஹாசன்

நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்த உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு முதலில் அரசியல் தலைவர்கள், ரஜினி, கமல் முதல் பல நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

நிலவேம்பு கசாயம் வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருந்தாக நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோதிகா!

அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை ஜோதிகாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு IndiaGlitz தனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் நேரில் சந்தித்த விஜய்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் முதல் காட்சி திரையிடப்படவுள்ள நிலையில் சற்றுமுன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் மீண்டும் சந்தித்தார்.

'வெற்றி' திரையரங்கில் ரசிகர்களுடன் 'மெர்சல்' பார்க்கும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பக்கா மாஸ் என்றும் குறிப்பாக மாறன் கேரக்டர் அட்டகாசமாக இருப்பதாக