தர்ஷா குப்தா உள்பட பிரபலங்கள் எஸ்கேப்.. பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

  • IndiaGlitz, [Sunday,October 01 2023]

இன்று தொடங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா உள்பட பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இவர்கள் இல்லாமல் இருப்பது பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நடிகைகள் தர்ஷா குப்தா, சோனியா அகர்வால், ஸ்ரீதேவி விஜயகுமார், இந்திராஜா ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நடிகர் அப்பாஸ், பப்லு பிரித்விராஜ் உள்ளிட்டவர்களும் போட்டியாளர்கள் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள பட்டியலில் இவர்களின் பெயர்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களே அதிகமாக போட்டியாளர்களாக இருப்பதால் இந்த சீசன் மற்ற சீசன்கள் போல் இருக்குமா அல்லது ஏமாற்றமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த 6வது சீசனிலும் புது முகங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த சீசனும் ஹிட்டாகிவிட்டது. அதேபோல் விஜய் டிவி ஏதாவது செய்து இந்த சீசனையும் ஹிட்டாக்கிவிடும் என்றும் அதுவும் இந்த சீசனில் இரண்டு வீடுகள், புதிய விதிகள் என்பதால் கண்டிப்பாக சுவாரசியமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விதிகள் மாறிவிட்டது, விளையாட்டும் மாற போகுது: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில்  இந்த சீசனின் முதல் புரமோ சற்றுமுன் விஜய் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது

இன்று ஒரே நாளில் 2 ரஜினி படங்களின் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..!

இன்று ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டு படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.  

'D50' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. வைரல் புகைப்படம்..!

தனுஷ் நடித்து, இயக்கி வரும் 'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவதாகவும்  இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

சமந்தா, த்ரிஷாவை அடுத்து பாங்காக் தெருக்களில் ஜாலி மூடில் அஞ்சலி.. வைரல் புகைப்படங்கள்..!

கடந்த சில நாட்களாக சமந்தா மற்றும் த்ரிஷா வெளிநாடுகளில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது பாங்காக் சென்று இருக்கும் நடிகை அஞ்சலியும் அந்நாட்டில் உள்ள தெருக்களில்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தலைவர் 170': சூப்பர் அப்டேட் கொடுத்த லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை லைகா நிறுவனம்