close
Choose your channels

தல-தளபதி ரைம்ஸ் மற்றும் கபாலியின் 'மகிழ்ச்சி'. 'தில்லுக்கு துட்டு' டீசர் விமர்சனம்

Thursday, May 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாகியுள்ள நிலையில் 'தில்லுக்கு துட்டு' படத்தில் ஆக்சன் பட ஹீரோவாகியுள்ளார் என்பது இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரியவருகிறது. ஒருசில நொடிகள் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளிலேயே சந்தானம் முன்னணி ஹீரோக்கள் போல அதிரடி சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளது வியப்பை தருகிறது.

மற்றபடி தமிழ் சினிமாவில் ஃபார்முலாவின்படி பேய்ப்படத்தில் காமெடி என்ற ஃபார்முலாதான் இதிலும் உள்ளது. சந்தானம் இந்த படத்தில் ஸ்லிம் ஆக ஒரு ஹீரோவுக்குள்ள அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளார். காதல், திகில், காமெடி மற்றும் ஆக்சன் கலந்த ஒரு ஜனரஞ்சக படமாக இருக்கும் என இந்த டீசரின் மூலம் தெரியவருகிறது.

மேலும் இந்த டீசரின் தொடக்கத்தில் மொட்டை ராஜேந்திரன் தல தளபதியின் 'கண்ணாம்பூச்சி ரே ரே, டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் ஆகிய ரைம்ஸ்களையும் 'கபாலி'யின் புகழ்பெற்ற வசனமான 'மகிழ்ச்சி' என்பதையும் பயன்படுத்தியுள்ளார்.

எஸ்.தமனின் மிரட்டும் இசை, ராம்பாலாவின் இயக்கம் ஆகியவை கண்டிப்பாக இந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறாது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.