தோனிக்காக வீட்டை மஞ்சள் நிறமாக மாற்றிய வெறித்தனமான ரசிகர்!

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. தல தோனி உள்பட சென்னை அணியின் வீரர்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பி வருகின்றனர். இதனால் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவரது வீட்டிற்கு ஜார்கண்ட் மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் ’வென்றாலும் வீழ்ந்தாலும் தோனி தான் எங்கள் தல’ என்று தோனியின் தீவிரமான ரசிகர் ஒருவர் தனது வீட்டை ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து மஞ்சள் நிறத்திற்கு மாற்றியுள்ளார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்ற பகுதியை அடுத்த அரங்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். துபாயில் பணிபுரிந்து வரும் இவர் தோனியின் தீவிரமான ரசிகர். இவர் தல தோனி மீதான தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் தனது வீட்டை ஒன்றரை லட்சம் செலவு செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து உள்ளார். அதுமட்டுமின்றி வீட்டின் சுவர்களில் தோனியின் உருவப் படங்களையும் வரைந்து விசில் போடு என்ற வாசகம் வைத்துள்ளார். மேலும் இதில் தோனியின் ரசிகர் வீடு என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார்

இந்த ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற வீரர்களின் ஆட்டமும் சிறப்பாக இல்லை என்றாலும் அந்த அணியின் ரசிகர்கள் கொஞ்சம்கூட மாறவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது

More News

முதல்வர் தாயார் மறைவு: பிரபல நடிகர் இரங்கல் அறிக்கை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலை காலமான நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எவிக்சனில் திடீர் திருப்பம்: மக்களின் வாக்குகளை மாற்றி அமைக்கும் சக்தி

இந்த வார நாமினேஷன் படலம் நேற்று தொடங்கிய நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எட்டு பேர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி கேப்டன் என்பதால் அவரது பெயர் நாமினேஷன் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

ரூபாய் நோட்டில் கொரோனா வைரஸா??? பதைக்க வைக்கும் தகவல்!!!

கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் பொருட்களின் மீது 3 நாட்கள் வரையிலும் தங்கியிருக்கும் என்ற அறிவிப்பை அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் வெளியிட்டு இருந்தது.

தமிழக முதல்வரின் தாயார் காலமானார்: துணை முதல்வர் ஆறுதல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் என்பவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 93 

விஜய்சேதுபதி இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடித்த 'கருப்பன்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பன்னீர்செல்வம் ஏற்கனவே 'ரேணிகுண்டா' என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே