close
Choose your channels

தோனியின் 'எல்ஜிஎம்' பட டீசரை வெளியிடும் சாக்‌ஷி தோனி.. தேதி அறிவிப்பு..!

Wednesday, June 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தல தோனி திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கினார் என்பதும் தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்ற இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படமே தமிழ் படம் என்ற அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம்.

’எல்ஜிஎம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் 'லவ் டுடே’ நாயகி இவானா, நதியா, யோகி பாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் நாளை இந்த படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி இருவரும் ’எல்ஜிஎம்’ படத்தின் டீசரை நாளை இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோனியின் முதல் தயாரிப்பு திரைப்படம் ’எல்ஜிஎம்’ படத்தின் டீசரை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதை குறிப்பிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.