கிரிக்கெட்டை அடுத்து சினிமா: தல தோனியின் அதிரடி முடிவு

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் தனது திறமையை மீண்டும் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஓய்வுக்குப் பின்னர் அவர் அடுத்ததாக சினிமா துறையை தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு ’தோனி என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்த தோனி, அந்த நிறுவனத்தின் சார்பில் ஒருசில டாகுமெண்டரி படங்களை எடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது வெப்சீரிஸ் தயாரிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரும், தோனியின் மனைவியுமான சாக்ஷி தோனி இதுகுறித்து கூறியபோது, ‘அறிவியல் சம்பந்தமான நாவல்களின் அடிப்படையில் வெப்சீரிஸ் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் குறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். மேலும் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஒரே நேரத்தில் 5 புதிய வெப்தொடர்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சாக்ஷி தோனி கூறியுள்ளார்.

கிரிக்கட்டில் ஓய்வுபெற்ற பின் தயாரிப்பாளராக சினிமா துறையில் களம் இறங்கியிருக்கும் தோனி விரைவில் நடிகராகவும் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

அரியர் மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிவிப்பு!!! ஏஐசிடிஇ அதிரடி!!!

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் அரியர் தேர்வுகளுக்கு, தேர்வு எழுதாமலே தேர்ச்சி வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது.

13 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணிக்கு கிடைத்த சோகம்!

13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

அசத்தலான யார்க்கர்கள்: தமிழக பந்துவீச்சாளர் நடராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

கொரானாவால் பாதிக்கப்பட்டும் பாட்டு பாடி உற்சாகமாக இருக்கும் 'விஸ்வாசம்' புகழ் பாடகர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்ற பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்றா மாற்றுத்திறனாளி பாடகர் 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலை தத்ரூபமாக

அனைவரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 28 ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்படும்