வெற்றிக்கு பின் பொறுப்பான தந்தையாக மாறிய தல தோனி

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தோனி மற்றும் ராயுடு ஆகியோர்களின் விஸ்வரூப ஆட்டத்தால் பார்வையாளர்களுக்கு ஒரு வானவேடிக்கை கிடைத்தது. பெங்களூர் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி, சென்னை அணி 206 என்ற இமாலய இலக்கை விரட்டி சென்று 5 விக்கெட்டுக்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெறவும் காரணமாக இருந்தது.

இந்த நிலையில் வின்னிங் ஷாட்டான சிக்சரை அடித்து முடித்தவுடன் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக மைதானத்தை விட்டு வெளியேறிய தோனி, வீட்டுக்கு சென்றவுடன் அவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்தது என்ன தெரியுமா?

தோனி தனது மகள் கூந்தலை உலர்த்தும் வீடியோ ஒன்றைப் பதிவு செய்து பின்னர் அதில், 'போட்டி முடிந்துவிட்டது. நல்ல தூக்கம் தூங்கினேன். தற்போது இது தந்தையின் கடமை” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள தந்தையாக மகள் கூந்தலை உலர்த்தும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Game over, had a nice sleep now back to Daddy’s duties

A post shared by M S Dhoni (@mahi7781) on Apr 26, 2018 at 2:54am PDT

More News

அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ்

நடிகர் பரத் நடிப்பில் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’.

தென்னகத்தில் தான்தான் தென்னவன் என் நிரூபித்த சென்னை:

அடுத்தடுத்து இரண்டு போட்டிகள். இரண்டும் தென் இந்தியாவின் மற்ற இரு அணிகளோடு என சென்னையின் பயணம் கடத்த 4 நாட்களில் செம்ம சூடு, சென்னை வெயிலைப்போலவே.

‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ படத்தின் ரன்னிங் டைம்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த ‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ என்ற திரைப்படம் வரும் மே மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ஓங்கி அடிச்சா 110 மீட்டர் தூரம் 6 டா! இம்ரான் தாஹீர் அசத்தல் டுவீட்  

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தினமும் ஒரு அணி வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அது தலைப்பு செய்தியாக மாறுகிறது

பிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய நூரின் செரிப்

'ஒரு ஆதார் லவ்' என்ற படத்தில் நடித்த பிரியா வாரியர், அந்த படத்தின் டீசரின் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் புகழ் பெற்றார். அவருடைய ஒரே ஒரு கண்ணசைவு மற்றும் புருவ நடனம், இளைஞர்களை அடிமையாக்கியது