துருவ் விக்ரம் அடுத்த படம்.. புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,September 23 2023]

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ’வர்மா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம், மீண்டும் வேறொரு இயக்குனரின் இயக்கத்தில் ஆதித்ய ’வர்மா’ என்ற பெயரில் படமானது.

இதனை அடுத்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து ’மகான்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று அவரது பிறந்த நாளை அடுத்து அவரது புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பை புதிய போஸ்டர் உடன் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கபடி விளையாட்டு கதையம்சம் குறித்த இந்த படம் துருவ் விக்ரம் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'லியோ' விஜய்யின் இண்ட்ரோ காட்சியை காண்பித்துவிட்டு, தண்டனையும் கொடுத்த லோகேஷ்.. மாஸ்டர் நடிகர் புலம்பல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன் டிவி சீரியல் நடிகை? சீரியலை பாதியில் விட்டுவிட்டு வருகிறாரா?

 விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க

வேட்டையன் - சந்திரமுகி மோதும் மாஸ் காட்சி.. 'சந்திரமுகி 2' புதிய ட்ரைலர்..!

 ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவான  'சந்திரமுகி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி

சிவகார்த்திகேயனின் 'அயலான்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. டீசர் எப்போது? சூப்பர் தகவல்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இனிமேல் கமல்ஹாசன், ரஜினிகாந்த் பாணி தான்.. சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு..!

 பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த திரைப்படங்கள் சமீப காலமாக வசூலில் சாதனை செய்யாத நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் பாணியை அவர் பின்பற்றப் போவதாக தகவல் வெளியாகி உள்ளன.