நீண்ட இடைவெளிக்கு பின் எதிர்பார்த்த தகவல்.. 'துருவ நட்சத்திரம்' படத்தின் சூப்பர் அப்டேட்..!

  • IndiaGlitz, [Friday,September 22 2023]

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்டது

இதன் பிறகு சமீபத்தில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் நடந்து வந்தது. தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

மேலும் நாளை இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அனேகமாக ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நீண்ட காலமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் ரசிகர்களுக்கு நாளை கிடைக்கப்போகும் தகவல் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது

விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

இது ரொம்ப ரொம்ப கேவலமானது. நடிகை சாய்பல்லவின் ஆவேச பதிவு..!

நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.

கார்த்தியுடன் மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் பட இயக்குனர்.. மீண்டும் ஒரு வெற்றிப்படமா?

நடிகர் கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' என்ற திரைப்படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்கினார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் 15 கோடி ரூபாய் செலவில்

பொய்ச்செய்தி பரப்பும் பத்திரிகையாளர்கள் களையெடுக்கப்படுவார்கள்: தயாரிப்பாளர்கள்‌ சங்கம்

பொய்ச்செய்தி பரப்பும் பத்திரிகையாளர்கள் களையெடுக்கப்படுவார்கள் என தயாரிப்பாளர்கள்‌ சங்கம் தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ தலைவர்‌ என்‌.ராமசாமி மற்றும்‌ நிர்வாகிகள்‌ ஒரு அறிக்கை

ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி.. நம்பிக்கை மோசடி உள்பட  2 பிரிவுகளில் வழக்கு..!

இசைப்புயல் ஏஆர் ரகுமான் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' என்ற நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த போது இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்: தொகுதியை அறிவித்த கமல்ஹாசன்..!

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட போவதாக உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.