சூப்பர் ஹிட் பாலிவுட் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா துருவ் விக்ரம்?


Send us your feedback to audioarticles@vaarta.com


2023-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘கில்’ என்ற ஆக்ஷன் திரைப்படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில், கரண் ஜோஹர் தயாரித்த இந்த படம் குறைவான ரன்னிங் டைம் கொண்டது என்றாலும், அதில் இடம்பெற்ற பிரம்மாண்டமான சண்டை காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தது.
இந்தியாவில் உருவான சிறந்த ஆக்ஷன் படங்களில் ஒன்றாக இந்த படம் கவனம் பெற்றது. கதாநாயகனாக லஷ்யா லால்வானி நடித்திருந்தார். அவருடன் ராகவ் ஜுயல், தன்யா மணிக்த்லா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இந்த படத்தின் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ரமேஷ் வர்மா பெற்றுள்ளார். ஆரம்பத்தில் ராகவா லாரன்ஸை இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது. தற்போது இந்த தமிழ் ரீமேக்கில் நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக தேர்வாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரம் ஒரு வித்தியாசமான பாணியில் ஆக்ஷன் ஹீரோவாக மாற போவதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் நடித்தால், அவரது கேரியரில் மாறுபட்ட ஒரு படமாக அமையலாம்..
நடிகர் துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments