close
Choose your channels

'பிகில்' புயலுக்கு பின் வரும் துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா'

Monday, September 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் படமான 'வர்மா' திரைப்படம், தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா அவர்களால் இயக்கப்பட்டு, பின் அந்த படம் ரிலீஸ் செய்யாமல் முடக்கப்பட்டது. இதனை அடுத்து அதே படம் 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் மீண்டும் கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாக்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

விஜய் தேவரகொண்டா நடித்த 'அர்ஜுன்ரெட்டி' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி அன்று விஜய்யின் 'பிகில்' படம் ரிலீசாவதை அடுத்து ஒரு சில நாட்களில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 'பிகில் புயல் ஓய்ந்த பின் 'ஆதித்யவர்மா' திரைப்படம் ரிலீஸ் ஆகின்றது.

துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்த படத்திற்கு ராதன் இசையமைத்துள்ளார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.