துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்'.. சூப்பர் அப்டேட்டை சொன்ன மாரி செல்வராஜ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’பைசன் காளமாடன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ’பைசன் காளமாடன்’ படத்தில் துருவ் விக்ரம் உடன் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மலையாள நடிகர் லால், பசுபதி, , கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும், எழிலரசு ஒளிப்பதிவாளராகவும், சக்தி திரு பட தொகுப்பாளராகவும், ஸ்டண்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன் பணிபுரியும் இந்த படத்தின் ஒரு மிகப்பெரிய அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்புடன் ஒரு சூப்பர் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
அனேகமாக நாளை ’பைசன் காளமாடன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
It's time to go big! Set your alarms for Bison's update tomorrow! #BisonKaalamaadan 🦬 💥 @applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi #AmeerSultan @rajisha_vijayan @editorsakthi… pic.twitter.com/vut7y7eHhq
— Mari Selvaraj (@mari_selvaraj) May 2, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments