துருவ் விக்ரம் நடித்த 'வர்மா ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Sunday,December 16 2018]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் நடித்து வந்த 'வர்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என்றும் இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் புதிய போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினம் வரும் மாதத்தில் காதல் படம் ஒன்று வெளிவருவது மிகப்பொருத்தமானதாக கருதப்படுகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் துருவ்க்கு ஜோடியாக மேகா செளத்ரி என்ற கொல்கத்தாவை சேர்ந்த நடிகை நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் 'காலா' புகழ் ஈஸ்வரிராவ், பிக்பாஸ் புகழ் ரைசாவில்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராதான் இசையில் சுகுமார் ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

More News

வதந்திகளை நம்ப வேண்டாம்: கமல்ஹாசன் வேண்டுகோள்

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல்முறையாக தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்

காஜல் அகர்வாலின் 'பாரீஸ் பாரீஸ்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய காஜல் அகர்வால் நடித்து வரும் 'பாரிஸ் பாரீஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே

அரவிந்தசாமியின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

கடந்த 2013ஆம் ஆண்டு 'தனி ஒருவன் படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன அரவிந்தசாமி, அதன்பின் 'போகன், 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மற்றும் செக்க சிவந்த வானம்' போன்ற

எட்டு வருடங்களுக்கு பின் 'ஜெயிலில்' இணைந்த தனுஷ்-ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமாவுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். இவர் நடித்து முடித்துள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில்

ஆறு நிமிட 'அடங்கமறு வீடியோ: வேற லெவல் என ரசிகர்கள் புகழாரம்

டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவுள்ள ஐந்து முக்கிய படங்களில் ஒன்று 'அடங்கமறு'. இந்த போட்டியிலும் தைரியமாக ஒரு படம் வெளிவருகிறது என்றால் படக்குழுவினர்களுக்கு தங்கள் படைப்பின் மீது இருக்கும்