close
Choose your channels

சியான் விக்ரம் மகனின் 'ஆதித்ய வர்மா' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு 

Friday, June 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கி போய்விட, அதற்கு பதிலாக 'ஆதித்யவர்மா' என்ற திரைப்படம் உருவாகி வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது

'ஆதித்ய வர்மா' படத்தின் டீசர் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாலாவின் 'வர்மா' திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்த நிலையில் இந்த டீசருக்கு கிடைக்கவுள்ள வரவேற்பை பொறுத்திருந்து பார்ப்போம்

துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்த படத்தை கிரிசய்யா இயக்கி வருகிறார். ராதன் இசையில் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.