இந்த தமிழ் நடிகை ஒரு கோல்ப் வீராங்கனையா? ஆச்சர்யமான ரசிகர்கள்!

தமிழில் கடந்த 2014 இல் வெளியான “என்னமோ ஏதோ” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதற்கு பிறகு நடிகர் கார்த்திக்குடன் “தீரன் அதிகாரம் ஒன்று“, நடிகர் சூர்யாவுடன் “என்ஜிகே“ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு கோல்ப் வீராங்கனை என்பதும் அவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு கொண்டவர் என்பதும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது. நடிகை ரகுல் ப்ரீத் சிங் வொர்க் அவுட் மற்றும் பிட்னஸ் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டிவருவதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் ஒரு கோல்ப் வீராங்கனை எனும் தகவல் தற்போது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட்டில் “காண்டம்“ பரிசோதகராக “Chhatriwali“ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து “Attack“, “Runway 34“, “Doctor“, “Thank God“ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “அயலான்“ திரைப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் “இந்தியன் 2“ திரைப்படத்தில் இணைந்து நடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

கடற்கரையில் குட்டி வாக்… வைரலாகும் சூர்யா-ஜோதிகா புகைப்படம்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் நடிகர் சூர்யா- ஜோதிகா தம்பதிகள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும்

'ஆர்.ஆர்.ஆர்' டிரைலரை பார்த்து சமந்தா கூறியது என்ன தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலரை பார்த்த பிரபல நடிகை சமந்தா

நானே வெட்டிக்கொண்டேன்… டிரெண்டான எலான் மஸ்க்கின் புது ஹேர் ஸ்டைல்!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் புது ஹேர் ஸ்டைல் புகைப்படம் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில்

நீ யாரு என்ன கேட்க? ராஜூ, சிபியுடன் ஆவேசமாக மோதும் பாவனி!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளியாகும் ஒவ்வொரு புரமோவிலும் ஒரு சண்டை கடந்த சில நாட்களாக காட்டப்பட்டு வருகிறது என்பதும் அந்த வகையில் இன்று வெளியான இரண்டு புரமோக்களிலும்

பிரபுதேவாவின் அடுத்த படத்தை புரமோஷன் செய்யும் விஜய்சேதுபதி!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபுதேவாவின் அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி புரமோஷன் செய்ய உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.