'டிக்கிலோனா' பட இயக்குனருக்கு திருமணம்: நேரில் வாழ்த்து சொன்ன சந்தானம்!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

நடிகர் சந்தானம் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ’டிக்கிலோனா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் ’டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி திருமணம் தற்போது நடந்து உள்ளது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்களை கார்த்திக் யோகி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் நடிகர் சந்தானம் நேரில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் கார்த்திக் யோகி பல ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார் என்பதும் இருப்பினும் ’டிக்கிலோனா’ தான் அவரது முதல் திரைப்படம் என்றும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படங்களில் கார்த்திக் யோகி பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.