close
Choose your channels

விஷாலின் அடுத்த பட நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Thursday, May 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ’எனிமி’ மற்றும் ’துப்பறிவாளன் 2’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷாலின் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. விஷாலின் 31 வது படமான இந்த படத்தை து.பா.சரவணன் இயக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு டிம்பிள் ஹயாதி என்பவர் நாயகியாக நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவான ’தேவி 2’ என்ற படத்தில் நடித்தவர் என்பதும் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.