தினகரன் கைது! அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன?

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

இரட்டை இலை சின்னத்தை பெற கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் சுமத்தப்பட்டு அதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தினகரன் கைது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவரது கைது குறித்து அரசியல் தலைவர்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்

பா.ஜ.மாநில தலைவர் தமிழிசை: தினகரன் கைது விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இதன் மூலம் பா.ஜ.,வால் தமிழகத்தில் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாஞ்சில் சம்பத்: 'தினகரனின் கைதால் அதிர்ச்சி அடையவில்லை. தினகரன் கைது பின்னால் சதித்திட்டங்கள் உள்ளன. இந்த கைது மூலம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது பா.ஜ.க. தினகரனை தெரியாது என கூறியிருக்கிறார் சுகேஷ். அரசியல், சட்ட ரீதியாக இப்பிரச்னையை எதிர்கொள்வோம்', என்றார் நாஞ்சில் சம்பத்.

இந்திய கம்யூ. முத்தரசன்: பா.ஜ.க மீது சந்தேகம் ஏற்படுகிறது. தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தினகரனை கைது செய்ய சுகேஷை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு அதிகம். தமிழகத்தில் காலூன்ற அ.தி.மு.கவை பலவீனப்படுத்துகிறது பா.ஜ.க. அதிமுகவை கபளீகரம் செய்து விட்டது பா.ஜ.க

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: முறையாக 37 மணி நேரம் விசாரணைக்கு பின்னரே தினகரன் கைது செய்யப்ப்டடுள்ளார். தினகரன் கைதுக்கு பா.ஜ. காரணம் என கூறுவதை ஏற்க முடியாது.

கர்நாடக மாநில அ.தி.மு.க., அம்மா அணியின் புகழேந்தி: அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். தாம் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பார்.

ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பொன்னையன்: தினகரனின் கைது அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சி. நாடே காரி துப்பும் அளவுக்கு தினகரனின் செயல் உள்ளது

காங்கிரஸ் செய்திதொடர்பாளர் கோபண்ணா: தினகரன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். டிடிவி தினகரன் கைது தமிழகத்துக்கு தலைகுனிவு. அரசியலில் இருந்து அதிமுவை அப்புறப்படுத்த வேண்டும். தவறிழைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: 'தினகரனின் தரப்பை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றது உண்மை என்றால் பணத்தை வாங்க முயன்ற தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அந்த அதிகாரி யார்?.. தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அந்த நபர் குறித்து விசாரிக்க வேண்டும். இதில் அரசியல் சதி இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதை தவிர்க்க முடியவில்லை'

ஓ.பன்னீர் செல்வத்தின் அணியை சேர்ந்த கே.சி.பழனிசாமி: முன் ஜாமீனை தினகரன் ஏன் தவிர்த்தார் என தெரியவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விஷயம் கொடுமையானது. முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு தினகரன் விசாரணையை எதிர்கொண்டிருக்க வேண்டும். தினகரனின் கைதுக்கும், எங்கள் அணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

More News

தினகரன் கைதான சில மணி நேரத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக, சசிகலா குடும்பத்தினர்களின் முழு கட்டுப்பாட்டில் சென்ற நிலையில் அதனை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்றார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு பெருமளவு இருந்தது...

தாதா சாகேப் பால்கே விருது வென்ற இயக்குனருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் அவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை அறிவித்தது...

பிரபல இயக்குனர் - ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென காலமானார். அவர் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்தாலும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிகிறது...

டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஒருங்கிணைந்த அதிமுகவின் சின்னமான இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில், டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கடந்த நான்கு நாட்களாக விசாரணை செய்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்துள்ளனர்.

முழு அடைப்பு போராட்டம் மக்களுக்கு மட்டும்தானா?

விவசாயிகளுக்காக திமுக தலைமையில் அரசியல் கட்சிகள் நடத்திய இன்றைய முழு அடைப்பு போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்தது