ஒரே சிக்ஸில் ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்கள் இடம்பிடிப்பது ஒரு காலத்தில் அரிதாக இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிப்பதே நம்ம தமிழக வீரர்கள் என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இலங்கை சுதந்திரதின கோப்பையின் இறுதி போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற 167 ரன்கள் இலக்கு என்ற நிலையில் களமிறங்கியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடியால் ஓரளவு இலக்கை நெருங்கினாலும் கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இரண்டு ஓவர்களில் 36 ரன்கள் என்ற கடினமாக இலக்கு இருந்தது.

இந்த நிலையில் தான் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தனது அதிரடியை ஆரம்பித்தார். 19வது ஓவரில் அவர் அடித்த 24 ரன்களால் வங்கதேச அணி அதிர்ச்சி அடைந்தது. இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டாலும், கடைசி ஓவரில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. முதல் நான்கு பந்துகளில் 4 ரன்களே எடுக்கப்பட்டதால் கடைசி இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் 5வது பந்தில் விக்கெட் வீழ்ந்ததால் இந்தியாவின் வெற்றிக்கு ஒரே ஒரு பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டிய இக்கட்டான நிலை. சிக்ஸ் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் சொல்லி வைத்தால் போல் மிண்டும் தனது அதிரடியால் தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடிக்க, மைதானமே குலுங்கியது. ஒரே ஒரு சிக்ஸ் அடித்து கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் இடம்பெற்றுவிட்டார் தினேஷ் கார்த்திக். இந்திய வீரர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வந்தனர்.

இந்திய அணியின் இன்னொரு தமிழக வீரரான அஸ்வின் ரவிச்சந்திரன் உள்பட பல இந்திய வீரர்களும், முன்னாள் வீரர்களும் தினேஷ் கார்த்திக்கை பாராட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு நேற்று ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இன்னொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. நேற்றைய போட்டியில் ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்கு நமது வாழ்த்துக்கள்

More News

தினேஷ் கார்த்திக்கை பாராட்டாத முரளிவிஜய்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

தமிழகத்தை சேர்ந்த இன்னொரு கிரிக்கெட் வீரரான முரளிவிஜய், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று தனது டுவிட்டில் பதிவு செய்துள்ளார்.

மருத்துவமனையில் நடராஜன் அனுமதி: சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்யுடன் 'தளபதி 62', விக்ரமுடன் 'சாமி 2', விஷாலுடன் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள படம் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

ஆரம்பமானது நயன்தாராவின் அடுத்த மெகா பட்ஜெட் படம்

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார்.

கமல்-விஷால் திடீர் சந்திப்பு: வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தையா?

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.