அதுக்கு பேரு Micro Stamping.. விசித்ரா குறித்து கூறியது இந்த ஒருவரை தவிர யாராக இருக்கும்?


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் ஃபினாலே நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் போட்டியாளர் யார் என்பதை அறிய பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளார்கள்.
இன்றைய முதல் இரண்டு புரமோவில் டிக்கெட் டு பினாலே குறித்தே இருந்து வந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவிலும் யார் இறுதி போட்டிக்கான டாஸ்க்கில் ஜெயிப்பார்கள் என்ற விவாதம் குறித்த காட்சி தான் உள்ளது. அதாவது விஷ்ணு மற்றும் தினேஷ் பேசும் காட்சிகள் மூன்றாவது புரமோவில் இடம் பெற்றுள்ளன.
இதில் விஷ்ணு ’விசித்ரா மேம் இறுதிப்போட்டிக்கு போகட்டும்’ என்று கூற அதற்கு தினேஷ் ஒப்புக்கொள்ளவில்லை. ’இந்த வாரம்தான் அவருக்கு கடைசி. இதில் தப்பித்துவிட்டால் அடுத்த வாரம் அவரே மக்களிடம் இரக்கத்தை சம்பாதித்து இறுதிப்போட்டிக்கு சென்று விடுவார். அவங்க ஒரு தந்திரம் வச்சுருக்காங்க. கேமரா முன்னாடி மட்டும் அழுது இரக்கத்தை வரவழைத்து கொள்வாங்க, உண்மையில் அழுவது இல்லை. அதுக்கு பெயர் வந்து Micro Stamping என்று கூறுகிறார்
தினேஷ் ஆரம்ப முதல் விசித்ரா மீது குறை சொல்லிக்கொண்டும் விசித்ரா குறித்து மற்ற போட்டியாளர்களிடம் தகாத முறையில் பேசிக்கொண்டும் இருக்கிறார். வைல்டு கார்டில் வந்தாலும் தினேஷ் ஒரு வலிமையான போட்டியாளராக பார்வையாளர்கள் மத்தியில் இருந்தாலும், அவர் விசித்ராவை மட்டுமே டார்கெட் செய்து வருவதால் அவர் மீதான மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments