close
Choose your channels

இயக்குனர் நலன்குமாரசாமியின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்!

Wednesday, September 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’சூதுகவ்வும்’ மற்றும் ’காதலும் கடந்து போகும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் நலன் குமாரசாமி என்பது தெரிந்ததே. இவர் விரைவில் விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தில் பிரபல நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் பெற்ற வெற்றியின் காரணமாக நடிகர் ஆர்யாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் நலன் குமாரசாமியின் படமும் ஒன்று அதில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் நலன் குமாரசாமி மற்றும் ஆர்யாவுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.