close
Choose your channels

'சைத்தான்' இயக்குனரின் அடுத்த படத்தில் அந்த கால ஆக்சன் ஹீரோ!

Monday, September 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ மற்றும் சிபிராஜ் நடித்த ’சத்யா’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணராஜ் தற்போது மூன்றாவது படத்திற்கு தயாராகியுள்ளார்.

பிரதீப் கிருஷ்ணராஜின் இந்த படமும் ஒரு அதிரடி ஆக்சன் கதையம்சம் கொண்ட படம் என்றும், இந்த படத்தில் டாக்டர் ராஜசேகர் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட செய்தி வெளிவந்துள்ளது. டாக்டர் ராஜசேகர் கடந்த 80களில் ‘இதுதாண்டா போலீஸ்’போன்ற படங்களில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போதும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் டாக்டர் ராஜசேகர் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

தனஞ்செயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கவிருப்பதாகவும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் பிரதீப் கிருஷ்ணராஜ் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.