சினிமா புரியாதவர்கள் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர்: பிரபல இயக்குனரின் சர்ச்சை பேச்சு!

  • IndiaGlitz, [Tuesday,August 02 2022]

சினிமா பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தான் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர் என்றும் அதனால்தான் விருதுக்கு தேர்ந்து எடுக்கும் படங்கள் தகுதியானதாக இல்லை என்றும் பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் மற்றும் தேசிய விருது பெற்றவர் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவருடைய படங்கள் மலையாள திரை உலகில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இந்த நிலையில் மலையாள சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் ’தேசிய திரைப்பட விருது கமிட்டியில் சினிமா புரியாதவர்கள் தான் இருக்கிறார்கள் என்றும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விருது கொடுக்கிறார்கள் என்றும், ஒரு படத்தை விருதுக்கு தேர்வு செய்ய என்ன அளவுகோல் என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் தேசிய விருது கமிட்டியில் புகழ்பெற்ற இயக்குனர், விமர்சகர்கள், கலைஞர்கள் நடுவர்களாக இருந்தார்கள் என்றும் இப்போது யார் இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எந்த படத்திற்கு என்ன விருது கொடுக்க வேண்டும் என்ற அளவுகோல் தெரியாமல் பிளாக்பஸ்டர் படங்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுவது நகைச்சுவையாக உள்ளது என்றும் இதை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன நடக்கும் என்று அனைவருக்கும் தெரியும் என்றும், இது ஒரு மிகப்பெரிய அநியாயம் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல என்றும் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் எந்த திரைப்படத்தை மனதில் வைத்து இதைபேசியிருப்பார் என்பது குறித்து கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
 

More News

ஹீரோக்கள் நள்ளிரவில் வீட்டுக்கு அழைப்பார்கள்: கமல், ஜாக்கிசான் பட நடிகையின் அதிர்ச்சி பேட்டி!

ஹீரோக்கள்  நள்ளிரவில் வீட்டுக்குள் அழைப்பார்கள் என்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது

'விஜயானந்த்' : தமிழில் வெளியாகும் பிரபல தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் 'விஜயானந்த்' என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள

மீண்டும் தொடங்கப்படுகிறதா 'துருவ நட்சத்திரம்'? நம்பிக்கை தரும் மாஸ் புகைப்படம்!

பிரபல இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் நீண்ட காலமாக தாமதமாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும்

'தளபதி 67'க்கு முன் லோகேஷ் கனகராஜின் திடீர் அதிகாரபூர்வ அறிவிப்பு: ரசிகர்கள் ஷாக்!

தளபதி விஜய் நடித்த இருக்கும் 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பதும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மதுரை அன்புசெழியன் உள்பட சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் ஐடி ரெய்டு

கலைப்புலி எஸ் தாணு உள்பட சினிமா பிரபலங்களை வீடுகளில் இன்று ஒரே நாளில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது