பட்ஜெட் அதிகமாக நான் காரணமா? விளக்கமளித்த 'கோப்ரா' இயக்குனர்!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய ‘கோப்ரா’ திரைப்படம் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

சமீபத்தில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டரில் டுவிட்டை பதிவு செய்திருந்தார். இந்த டுவிட் குறித்து ஒரு சிலர் கேள்வி எழுப்பியபோது, ‘தயாரிப்பாளருக்கு அதிக பட்ஜெட்டை இழுத்துவிட்டு அவருக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்க வில்லையே’ என்று கூறியிருந்தனர்.

இதற்கு விளக்கம் கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, ‘கோப்ரா’ பட்ஜெட் அதிகமானதற்கு நான் காரணம் இல்லை என்றும், இதை எப்போது வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும் என்றும், எனவே ஆதாரம் இல்லாமல் எதையும் பேச வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் படக்குழு என்றால் அது தயாரிப்பாளரையும் சேர்த்து தான் என்றும் நான் என்றுமே அவரை கைவிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.


 

More News

பிரபுதேவா அடுத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் மட்டுமே கவனத்தில் கொண்டு இருந்த பிரபுதேவா தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் பிசியாகி வருகிறார்.

கோலி ஆசையாகக் கொடுத்த பரிசைத் திருப்பிக்கொடுத்த சச்சின்… என்ன காரணம்?

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தான் ஓய்வுப்பெறும்போது விராட் கோலி ஒரு அன்பு பரிசைக் கொடுத்ததாகவும் அதை மீண்டும் அவருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டேன்

விஜய் அணிந்திருப்பது சிலுவையா? நங்கூரமா? 'அரபிக்குத்து' பாடலால் எழுந்த விவாதங்கள்!

 சமீபத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' பாடல் வெளியான நிலையில் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை அளித்துள்ளனர் என்பது தெரிந்ததே

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியான 'அயலான்' படத்தில் அசத்தல் ஸ்டில்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் தெரிவிக்கும் வகையில் 'அயலான்' படக்குழுவினர் வெளியிட்டுள்ள சூப்பர் ஸ்டில் ஒன்று

செந்தில்-ராஜலட்சுமியா இது? காதலர் தின புகைப்படங்களால் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்று தற்போது திரைப்படங்களில் பாடி வரும் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடி சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு திருமண கோலத்தில்