close
Choose your channels

'பிரேமம்' இயக்குனருக்கு கிடைத்த பதவி உயர்வு

Thursday, October 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'நேரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், சமீபத்தில் வெளிவந்த 'பிரேமம்' படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலம் ஆனார். 'பிரேமம்' என்று சொன்னவுடன் மலர் டீச்சர் ஞாபகம் வரும் அளவுக்கு அற்புதமான கேரக்டரின் படைப்பாளியான இவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி பிரபல மலையாள தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி அவர்கள் மகள் அலீனாவை திருமணம் செய்தார். இந்நிலையில் இதுவரை இயக்குனராக மட்டுமே இருந்த அல்போன்ஸ் இன்று முதல் தந்தை என்ற பதவியையும் பெற்று புரமோஷன் ஆகியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது, 'இந்த சந்தோஷத்தை எப்படி வார்த்தைகளால் பகிர்ந்து கொள்வது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்கின்றேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்ரன் - அலீனா தம்பதிக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.