சூழ்ச்சிகளை தைரியமாக எதிர்கொள்வோம்: நீட் எழுதும் மாணவர்களுக்கு பிரபல இயக்குனர் அறிவுரை!

  • IndiaGlitz, [Saturday,September 12 2020]

நீட் தேர்வுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நீட் தேர்வு பயம் காரணமாக தமிழகத்தில் மாணவ மாணவிகள் தங்கள் விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

இந்த நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் சில கருத்துக்களை தெரிவிப்பது சமூக ஆர்வலர்களின் கடமையாக உள்ளது. அந்த வகையில் இயக்குனர் அமீர் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

என் அன்பார்ந்த மாணவ மாணவிகளே, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தாலும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீட் தேர்வு நம்மீது வலிய திணிக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் நாளை நமது மாணவச் செல்வங்கள் நீட் என்னும் தேர்வை எழுதவுள்ளனர்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்த தேர்வை எழுதி நீங்கள் வெற்றி பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகையால் மாணவச் செல்வங்களே, தைரியமாக இந்தத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உங்களால் நிச்சயமாக இந்த நீட் தேர்வில் வெற்றிக்கொள்ள முடியும். உங்களால் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முடியும். நீங்கள் உங்களுடைய உயர் கல்வி என்ற கனவு லட்சியத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு உங்களால் முடியும் என்ற உறுதியோடு, உங்களது பெற்றோர்களுடன் நலன்களையும், அவருடைய எதிர்காலத்தையும், உங்களுடைய எதிர்காலத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இந்த நீட்தேர்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே!

போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கூட, நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட களத்தில் நாம் தொடர்ந்து பயணித்தாலும் கூட இந்தத் தேர்வில் வெற்றி கொள்வோம் என்ற எண்ணத்தோடு தேர்வை எழுதுங்கள். சூழ்ச்சிகளுக்கு நாம் துவண்டு விடக்கூடாது, சூழ்ச்சிகளால் நாம் தோற்று விடக் கூடாது என்ற காரணத்திற்காகவும் இதை எதிர்கொண்டு வெற்றி கொள்வோம். வெற்றி உங்கள் பக்கம். வாழ்த்துக்கள். எழுதுங்கள் வெற்றி கொள்ளுங்கள்’ என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்

More News

இன்று ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா!

இன்று ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

15 வருஷமா துணையை திரும்பிக்கூட பார்க்காத மலைப்பாம்பு… 7 முட்டைகள் ஈன்ற விசித்திர சம்பவம்!!!

அமெரிக்காவில் கடந்த 15 வருடங்களாக எந்த ஆண் மலை பாம்புடனும் தொடர்பே இல்லாத பெண் மலைப்பாம்பு ஒன்று 7 முட்டைகளை ஈன்ற விசித்திரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

பிரபல பாடகியின் உறவினரை அறிமுகம் செய்த டி.இமான்: யார் தெரியுமா?

இசையமைப்பாளர் டி இமான் அவ்வப்போது திறமையான பாடகர்களை இனம்கண்டு தான் இசையமைக்கும் படத்தில் அறிமுகம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

ஜோதி ஸ்ரீதுர்காவின் மரணமே இறுதி மரணமாக இருக்க செய்யப்போவது என்ன? கமலஹாசன்

நீட்தேர்வு அச்சம் காரணமாக ஏற்கனவே கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ, அரியலூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்! ரசிகர்களிடையே பரபரப்பு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை