close
Choose your channels

தலைமை செயலகம் நோக்கி செல்லும் இயக்குனர் அமீர்.. வைரலாகும் புகைப்படம்

Monday, December 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் அமீர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு 'உயிர் தமிழுக்கு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் ஒரு அரசியல்வாதி போன்று கையை கும்பிட்டபடி அமீர் இருக்கும் காட்சியும் அவருக்கு பின்னால் தமிழக அரசின் தலைமைச் செயலகம் இருக்கும் காட்சியும் உள்ளன

மேலும் இந்த போஸ்டரில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்பட பல அரசியல் கட்சிகளின் கொடிகளும் இருப்பதை அடுத்து இது ஒரு அரசியல் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தற்கால அரசியல் விஷயங்கள் இருக்கும் என்றும், பல சூடான வசனங்களும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கும் ’உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படத்தில் சாந்தினி, இமான் அண்ணாச்சி சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஆதம்பாவா என்பவர் இயக்கியுள்ளார். வித்யாசாகர் இசையில் தேவராஜ் ஒளிப்பதிவில் அசோக் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.