விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய பிரபல இயக்குனரின் மகன்கள்

  • IndiaGlitz, [Friday,July 14 2017]

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இந்த படம் குறித்த செய்திகள் தினமும் சமூக இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கோலிவுட் திரையுலகில் உள்ள விஜய்யின் தீவிர ரசிகர்களால் இந்த படத்திற்கு இலவச புரமோஷன்கள் கிடைத்து வருகிறது.

நேற்று பிரபல நடிகர் நாசரின் மகன் ஃபைசல் தனது காரில் விஜய்யின் 'மெர்சல்' டைட்டில் லோகோவை தனது காரில் வரைந்திருந்தார் என்று வெளிவந்த செய்தியினை பார்த்தோம். தற்போது பிரபல இயக்குனரின் இரண்டு மகன்கள் விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

'அச்சமுண்டு அச்சமுண்டு', 'பெருச்சாழி' படங்களை இயக்கிய இயக்குனர் அருண்வைத்தியநாதன் தற்போது அர்ஜூன் நடிக்கும் 'நிபுணன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இவருடைய இரண்டு மகன்கள் ஆதித் மற்றும் அத்வைத் ஆகியோர் விஜய்யின் ஆட்டோகிராபை பெற்றுள்ளனர். 'மெர்சல்' படம் போட்ட பனியனுடன் இருவரும் சந்தோஷத்துடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்மணி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைபப்டம் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. பாவனா

பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது தெரிந்ததே. பாவனா கடத்தப்பட்டு ஆபாசமாக வீடியோ எடுக்கப்பட்டார் என்பதுதான் இந்த வழக்கின் முக்கிய குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது...

சிவகார்த்திகேயனுக்கு தவறான விருதா? நெட்டிசன்களால் பரபரப்பு

தமிழக அரசு நேற்று 2009-2014 ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதினால் திரையுலகினர் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனுக்கு தவறாக விருது கொடுக்கப்பட்டுள்ளதாக பிரச்சனையை கிளப்பியுள்ளனர்....

பிரபல ஓவியர் வீரசந்தானம் காலமானார்

பிரபல ஓவியரும் தமிழ் பற்றாளருமான வீர்சந்தானம் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. மூச்சுத்திணறல் காரணமாக அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளார்...

இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி: வீழ்ந்த இடத்திலேயே எழுந்தார்!

திருநங்கை என்றாலே ஒடுக்கப்பட்ட இனமாக இந்த நூற்றாண்டிலும் கருதப்படும் நிலையில் ஒரு திருநங்கை தங்குவதற்கு இடமில்லாமல் பேருந்து நிலையத்தின் தூங்கி காலத்தை கழித்தார். இன்று அவர் அந்த பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள நீதிபதி.

என பொண்ணுக்கு நடிக்கவே தெரியாது! கதறும் காயத்ரியின் தாயார்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்ச்யில் காயத்ரியின் சர்ச்சைக்குரிய பேச்சுதான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாக் ஆக உள்ளது