அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

கொரோனா வைரஸ் காரணமாக பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். கொரோனாவால் திரையுலக பிரபலங்களின் உயிரிழப்புகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தற்போது நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனாவால் உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’, தளபதி விஜய் நடித்த ’பைரவா’ உள்பட ஒரு சில படங்களுக்கு பாடல்கள் எழுதிய அருண்ராஜா காமராஜ், கடந்த 2018 ஆம் ஆண்டு ’கனா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ’ஆர்டிகிள் 15’ என்ற திரைப்படத்தின் ரீமேக் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் இதில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கொரோனா இரண்டாவது அலையில் பல திரையுலக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு அதில் ஒரு சிலர் உயிரிழந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிந்துஜா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில்  காலமானார் என்ற செய்தி திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

More News

வைரமுத்துவின் "நாம் நடந்த தெருவில்" காதல் பாடல் வெளியானது...! கமெண்டுகளை குவிக்கும் காதல்வாசிகள்....!

கவிஞர் வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ் தனது 5-வது பாடலை வெளியிட்டுள்ளார்.

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்...! மோடிக்கு சவால் விட்ட அரசியல் தலைவர்......!

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய&#

பிகினி உடையுடன் சைக்கிள் ஓட்டும் 'பிகில்' பட நடிகரின் மகள்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் நடித்த நடிகரின் மகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் சைக்கில் ஓட்டும் வீடியோ பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

7 மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை: கொரோனா நேரத்தில் சமந்தாவின் ஊக்கமளிக்கும் மெசேஜ்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனா என்றாலே அனைவருக்கும் நடுநடுங்க வைக்கும் அளவுக்கு பயம்

பழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி!

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. கடந்த 1999ஆம் ஆண்டு 'உங்கள் தீர்ப்பு' என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான டிடி