ஒத்திவைக்கப்பட்ட இயக்குனர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பதும் இதனை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், தேர்தல்கள் உள்பட அனைத்தும் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
அந்த வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அதன் பின்னர் அன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தேர்தல் சென்னை கேகே நகர் ராஜமன்னார் சாலை 41ஆம் எண்ணில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் தபால் மூலம் வாக்குப் பதிவு செய்ய விரும்புவோர் 100 கட்டணம் செலுத்தி அதற்கான கடிதத்தை கொடுக்க வேண்டும் என்றும் தபால் வாக்கு அனுப்ப வேண்டிய முகவரியை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் தபால் வாக்குக்கான கட்டணம் மற்றும் கடிதம் கொடுக்க கடைசி தேதி பிப்ரவரி 16 என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்றும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.