'தெறி'யில் மேலும் ஒரு விஐபி? இதுவரை வெளிவராத சஸ்பென்ஸ்

  • IndiaGlitz, [Wednesday,April 13 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் இன்று இரவே ஒருசில நாடுகளிலும், நாளை அதிகாலை முதல் இந்தியாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் கட்-அவுட், பேனர்கள் கட்டுவதில் விஜய் ரசிகர்கள் பிசியாக உள்ளனர்.


இந்நிலையில் இந்த படத்தில் எதிர்பாராத திருப்பமாக விஜய் மகன் சஞ்சய் ஒருசில காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய 'தெறி' பிரஸ்மீட்டில் விஜய் மகன் சஞ்சய் இந்த படத்தில் நடித்துள்ளாரா? என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியை சற்றும் எதிர்பாராத இயக்குனர் அட்லி, அந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்கினார். பின்னர் சுதாரித்து 'நாங்க சஸ்பென்ஸா வைத்திருந்தோம், நீங்க இப்ப கேட்டுட்டீங்க' என்று மட்டும் கூறிவிட்டு அடுத்த கேள்விக்கு தாவினார்.

இதில் இருந்து விஜய் மகன் சஞ்சய் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தில் சஞ்சய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், விஜய் மகன் சஞ்சய், விஜய் மகள் திவ்யா என விஜய்யின் குடும்ப படமாக மாறியுள்ள 'தெறி' படத்தில் சஞ்சய்க்கு அட்லி என்ன கேரக்டர் கொடுத்துள்ளார் என்பதை நாளை வெள்ளித்திரையில் தெரிந்து கொள்வோம்.

More News

'தெறி'யின் பாசிட்டிவ்கள் என்னென்ன? அட்லி விளக்கம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது...

இளையதளபதி விஜய்யின் 'தெறி' ரன்னிங் டைம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தெறிக்க உள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

சிம்புவின் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் தேதி

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் நேற்று சென்சார் ஆகி 'யூ' சர்டிபிகேட் பெற்ற நிலையில்...

ஜி.வி.பிரகாஷின் 'பென்சில்' ரிலீஸ் தேதி

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற போதிலும்...

ஆத்திகராக மாறிய நாத்திகர் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நாத்திக கொள்கையுடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய படங்களிலும் நாத்திக கருத்துக்கள் மெல்லியதாக ஊடுருவி இருக்கும்.....