close
Choose your channels

ஷங்கரின் உதவியாளர் முதல் ஷாருக்கான் படம் வரை: இயக்குனர் அட்லி பிறந்த நாள்!

Tuesday, September 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய இயக்குனர் அட்லி, இன்று இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் படத்தை இயக்கும் அளவிற்கு கடந்த சில ஆண்டுகளில் வளர்ந்து உள்ளார். அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஷங்கர் இயக்கிய ’எந்திரன்’ மற்றும் ’நண்பன்’ ஆகிய திரைப்படங்களில் உதவியாளராக பணிபுரிந்த இயக்குனர் அட்லி, கடந்த 2013ஆம் ஆண்டு ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா உள்பட பலர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தா விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கினார் என்பதும், இந்த மூன்று படங்களும் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் அட்லி, ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஷங்கரின் உதவியாளராக திரையுலக வாழ்க்கையை தொடங்கி 10 ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு இயக்குனராக மாறியிருக்கும் அட்லி, மென்மேலும் வெற்றிகளை குவிக்க இந்த பிறந்த நாளில் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.