ப்ளஸ் 2 தேர்வில் அட்லி பாஸ் ஆவாரா?

  • IndiaGlitz, [Sunday,April 03 2016]

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன் தினம் நிறைவடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதியுள்ள நிலையில் 'தெறி' இயக்குனர் அட்லியும் ப்ளஸ் 2 தேர்வை எழுதியுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
'எனது முதல் படமான 'ராஜா ராணி' படத்தை முடித்தவுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய உணர்வில் இருந்ததாகவும், தற்போது 'தெறி' படத்தை முடித்தவுடன் ப்ளஸ் 2 தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவனைப் போல் இருப்பதாகவும் அட்லி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் தன்னால் முடிந்தவரை இந்த படத்திற்கு பெஸ்ட் உழைப்பை கொடுத்துள்ளதாகவும், இனி ரசிகர்கள்தான் இந்த படத்திற்கான தீர்ப்பை தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்திற்காக அட்லிக்கு 100க்கு 100 மார்க் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தெறி' படத்தின் சென்சார் தகவல்கள்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' படம் சமீபத்தில் சென்சார் செய்வதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது...

தமிழின் முதல் 'ஸ்டார் வார்ஸ்' டைப் படத்தில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மிருதன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழின்...

'பாகுபலி 2 படத்தில் இணைகிறாரா பிரபல பாலிவுட் நடிகை?

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம்...

கர்நாடகத்தில் 'கத்தி'யுடன் இணைந்த 'தெறி'

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளின்...

எஸ்.எஸ்.ராஜமெளலியின் சரித்திர படத்தில் விஜய்?

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்...