மிஷ்கினுக்கு டைட்டில் உதவி செய்த பாலா!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் ’பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்து இருப்பதாகவும், இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் ’பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகமாக இருந்தாலும் இன்னும் இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக தனக்கு சொந்தமான டைட்டிலை பாலா அவர்கள் கொடுத்து உதவி செய்து இருப்பதாகவும் அதற்காக அவருக்கு நன்றி செலுத்தி கொள்வதாகவும் மிஷ்கின் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய ’பிசாசு’ படத்தின் டைட்டிலை முடிவு செய்தது பாலா என்று கூறப்பட்டது.

More News

திருமண ஆசைக்காட்டி இளைஞரிடம் 7 லட்சம் மோசடி… பரபரப்பான பின்னணி!!!

பெங்களூர் அடுத்த மாரத்தஹள்ளி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த இளைஞர் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் திருமண ஆசைக்காட்டி பண மோசடியில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

அட்லியின் அடுத்த படத்திலும் ஹீரோவுக்கு டபுள் ஆக்சன்?

'ராஜா ராணி' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த 'தெறி' 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார்

இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் ரேஷன் கடைகள்… கொரோனா நேரத்தில் அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடமாடும் ரேஷன் கடைகளுக்கான திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.

ஓட்டலில் ராஷ்மிகா திருடிய பொருள்: வைரலாகும் வீடியோ!

ஓட்டலில் தங்கியிருந்தபோது தான் ஒரு பொருளை திருடியதாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றேனா? கமல் பட நடிகர் விளக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்