தனுஷின் 'மாரி 2' குறித்த மகிழ்ச்சியான செய்தி

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான வெற்றிப்படம் 'மாரி'. இந்த படத்தின் 2ஆம் பாகம் மிக விரைவில் உருவாகவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் தற்போது பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. 'மாரி' படத்தின் முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் இன்னும் சிலர் இந்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அரசியலை நோக்கி நகர்த்தப்படுகிறாரா கமல்ஹாசன்?

தமிழக அரசியலில் சினிமா நடிகர்களின் ஆதிக்கம் இருந்தது போல் மற்ற மாநிலங்களில் இருந்திருக்குமா? என்பது சந்தேகமே.

பிக்பாஸ் வின்னர் யார்? கடுப்புடன் கணித்த நமீதா

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தபோதிலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் பார்க்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி பிரபலம் ஆகிவிட்டது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆதரவு

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியபோது அவர் தமிழ்ப்பாடல் மட்டுமே பாடியதாக குற்றம் சாட்டி லண்டன்வாழ் வட இந்திய ரசிகர்கள் நிகழ்ச்சி முடியும் முன்பே வெளியேறியதாக செய்திகள் வெளிவந்தது.

ஒரே படத்தில் உச்சத்தை தொட சிம்புவுக்கு அரிய வாய்ப்பு

சிம்பு நடித்த 'AAA' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து அவர் சேர்த்து வைத்திருந்த இத்தனை ஆண்டுகால நல்ல பெயரை ஒரே படம் தகர்த்தெறிந்துவிட்டது.

பிக்பாஸ் ஆர்த்தியின் முதல் டுவீட்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்.