நடிகர் சங்க தேர்தல் குறித்து பாரதிராஜா கருத்து

  • IndiaGlitz, [Friday,October 16 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் தரப்பினர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மோதல் செய்து வந்ததை ஏற்கனவே நிறைய பார்த்துவிட்டோம். இந்நிலையில் இதுவரை இந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்காத இயக்குனர் இமயம் பாரதிராஜா, தற்போது முதல்முறையாக ஒருசில கருத்துக்களை இன்று அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் காரணமாக இருதரப்பினர்களும் அரசியல்வாதிகள் போல ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்வது மிகுந்த வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ள பாரதிராஜா, தனது நீண்ட நாள் கோரிக்கையான 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற பெயரை 'தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம்' என்று மாற்றக்கோரியதை இதுவரை நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் செவிசாய்க்கவில்லை என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில் அண்டை மாநில கலைஞர்களும் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்ததால் அப்போது 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற பெயர் வைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அந்த கலைஞர்கள் தங்களுக்கென தனியாக சங்கம் வைத்துக்கொண்ட பிறகாவது நம்மவர்கள் பெயரை மாற்றியிருக்கலாம் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மற்ற மொழி கலைஞர்கள் நம் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் தலைமை பதவிக்கும், நிர்வாக பதவிக்கும் தமிழர்கள்தான் வரவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

நடிகர் சங்க தேர்தல்: வழிகாட்டும் நெறிமுறைகள் அறிவிப்பு

நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் மேற்பார்வையில் நடைபெறவுள்ள நிலையில்...

10 எண்றதுக்குள்ள டூயட் இல்லாத காதல் படம். விக்ரம்

விக்ரம், சமந்தா நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிய '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது...

ரஜினியின் 'லிங்கா'வுடன் கனெக்ஷன் ஆகும் தனுஷின் 'தங்கமகன்'?

இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'தங்க மகன்'...

வேதாளம் பாடல்கள் விமர்சனம்

அஜீத் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேதாளம்' படப்பாடல்கள் நேற்று ரிலீஸ் ஆகி...

விஜய்யின் தந்தை இயக்கத்தில் நடிக்கும் விஜய்?

விஜய்யின் 59வது படத்தை தயாரித்து வரும் கலைப்புலி எஸ்.தாணு, விஜய்யின் தந்தை இயக்கவுள்ள ஒரு படத்தையும் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது...