உங்களை வாழவைத்த மக்களை விட இந்த படம் பெரிதா? விஜய்சேதுபதிக்கு பிரபல இயக்குனர் கேள்வி!

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’800’ என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களும், வெளிநாட்டுவாழ் தமிழர்களும் ஒரு சில திரையுலக பிரபலங்களும் விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறி வருகின்றனர்

இந்த நிலையில் ஏற்கனவே இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் தாமரை, உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களும், வேல்முருகன் உள்ளிட்ட ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும் விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் சேரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’உங்களை வாழ வைத்த மக்களை விட இந்த படம் பெரிதா? என்ற கேள்வி எழுப்பியதோடு, உங்கள் நடிப்பு தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது, எனவே இந்த படத்தில் நடிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் சகோதரா’ என்று அறிவுரை கூறியுள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது.