விஜய்யின் 'புலி' பிரஸ்மீட். சில துளிகள்

  • IndiaGlitz, [Wednesday,July 29 2015]

விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு முதலில் புலி படக்குழுவினர் மெளன அஞ்சலி செலுத்தினர்.

இந்த பிரஸ் மீட்டில் இருந்து கிடைத்த சில தகவல்கள்:

பி.டி.செல்வகுமார்: விஜய் படத்தில் இருக்கும் அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் 'புலி' படத்தில் உள்ளது. அதே நேரத்தில் இதுவரை விஜய் படத்தில் இடம்பெறாத சில விஷயங்களும் இதில் பார்க்கலாம்.

புலி படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் ஏழு நாடுகளில் ஆர்.சி.கமலக்கண்ணன் அவர்களின் மேற்பார்வையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நான் ஈ, மகதீரா ஆகிய படங்களுக்கு இவர்தான் சிஜி பணிகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிபுதமீன்: மிகப்பெரிய வெற்றி பெற்ற தெலுங்கு படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஸ்ரீதேவி தவிர்த்தார். ஆனால் சிம்புதேவனின் வித்தியாசமான கதைக்காக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தின் வித்தியாசமான கதையை கேட்டதுமே ஸ்ரீதேவியின் முகம் பிரகாசமானது. உடனடியாக எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார்

தேவிஸ்ரீ பிரசாத்: 'புலி' போன்ற வித்தியாசமான முயற்சியை விஜய் போன்ற பெரிய ஸ்டார் ஒப்புக்கொண்டு நடித்ததற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

More News

தனுஷ் மீதான அவதூறு வழக்கிற்கு தடை. சென்னை ஐகோர்ட் உத்தரவு

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த 'காக்கா முட்டை' திரைப்படம் தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகளை பெற்று தமிழ்த் திரையுலகிற்கு பெரும்புகழ் பெற்று தந்தது....

VSOP படத்தின் டிராக் லிஸ்ட் விபரம்

'பாஸ் என்கிற பாஸ்கரன்' என்ற வெற்றி திரைப்படத்திற்கு பின்னர் எம்.ராஜேஷ், ஆர்யா மற்றும் சந்தானம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம்...

விஜய்யின் 2வது வெற்றிப்படமா புலி?

விஜய்-மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜில்லா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று தெலுங்கில் ரிலீஸாகி நல்ல ஓபனிங்...

விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக இணையும் சமுத்திரக்கனி

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பாபிசிம்ஹா மற்றும் பலர் நடித்த 'சூது கவ்வும்' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி...

நடிகர் சங்க தேர்தல். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த 15ஆம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விஷால் தரப்பில் இருந்து ஜூலை 15-ந் தேதி...