தனது படத்தின் நாயகியை திருமணம் செய்யும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,January 26 2021]

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே பாராட்டியதோடு எனக்கு ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது

 

இந்த நிலையில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் பெரியசாமிக்கு திருமணம் நடைபெற உள்ளது. இவர் இயக்கிய ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்த நாயகிகளில் ஒருவரையே அவர் திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நிரஞ்சனி அகத்தியன். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத்தான் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி திருமணம் செய்ய உள்ளார் இவர்களது திருமண பத்திரிகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இயக்குநருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளான கனி, இயக்குனர் திரு என்பவரையும், இரண்டாவது மகளான விஜயலஷ்மி இயக்குனர் ஃபெரோஸ் என்பவரையும் திருமணம் செய்திருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது மகளான நிரஞ்சனியும் ஒரு இயக்குனரையே திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது