இயக்குனர் கெளதமன் மகன் திடீர் கைது.. மதுபோதையால் ஏற்பட்ட பிரச்சனையா?


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் இயக்குனர் கெளதமன் மகனை காவல்துறை கைது செய்திருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டு ’கனவே கலையாதே’, அதன்பிறகு 2019ஆம் ஆண்டு ’மகிழ்ச்சி’ ஆகிய என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் கௌதமன். அதன்பிறகு அவர் அரசியலிலும் ஈடுபட்டார் என்பதும், தனிக்கட்சி ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குனர் கௌதமன் மகன் வியாபாரி ஒருவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனகாபுத்தூர் காமராஜபுரம் அருகே மளிகை கடை நடத்திவரும் சண்முகம் என்பவர், தனக்கு சொந்தமான ஆட்டோவில் குடும்பத்துடன் உணவகத்திற்கு சென்றிருந்தார். உணவு அருந்திவிட்டு மீண்டும் வந்தபோது, அந்த ஆட்டோவில் இரண்டு இளைஞர்கள் மது போதையில் இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் வெளியேறுமாறு கண்டித்தார். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சண்முகத்தை அந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், சண்முகத்தை தாக்கியவர்களில் ஒருவர் கெளதமன் கௌதமன் மகன் தமிழழகன் என்றும், இன்னொருவர் சரத் என்றும் தெரியவந்துள்ளது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் சில மணி நேரத்தில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கெளதமன் மகன் தமிழழகன், தனுஷ் நடித்து வரும் ’இட்லி கடை’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments