சிறுத்தை சிவாவின் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்துவாரா எச். வினோத்?
தல அஜித் நடித்த 3 படங்களை தொடர்ச்சியாக இயக்கி மூன்றையும் வெற்றி படமாக்கி ஹாட்ரிக் சாதனை செய்தவர் இயக்குனர் சிறுத்தை சிவா என்பது தெரிந்தது. அவர் இயக்கிய ’வேதாளம்’ ’விவேகம்’ மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய மூன்று படங்களும் நல்ல வரவேற்பையும் வசூலையும் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இதேபோல் தற்போது அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ மற்றும் ’வலிமை’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குனர் எச்.வினோத் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தாலும் அஜித்தின் தேர்வு மீண்டும் எச் வினோத் ஆக இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
எனவே ஏற்கனவே சிறுத்தை சிவா நிகழ்த்திய ஹாட்ரிக் சாதனையை எச் வினோத் நிகழ்த்துவாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்