ஓபிஎஸ் அவர்களுக்கு நேரில் சென்று ஆதரவளித்த எம்ஜிஆரின் கலையுலக வாரிசு

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தனது கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ். அதிமுகவில் சில ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் தனது ஆதரவை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து பேசிய கே.பாக்யராஜ், தன் ஆதரவு என்றும் அவருக்கு இருக்கும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது ஆதரவை ஓபிஎஸ் அவர்களுக்கு தெரிவித்துள்ளார் என்பதை பார்த்தோம். கங்கை அமரன், கே.பாக்யராஜ் ஆகியோர்களை அடுத்து இன்னும் பல திரையுலகினர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.

More News

ஓபிஎஸ், சசிகலா குறித்து கமல்ஹாசன் கூறியது என்ன?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில  நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறி வருகிறார். அந்த வகையில் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் யார் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று அவர் கூறிய கருத்தை பார்ப்போம்...

தமிழகத்தை இரண்டாக உடைத்துவிட வேண்டாம். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகவே தமிழக நிலவரம் குறித்து பரபரப்பான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு பிரச்சனை சமயத்தில் அவரது கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது...

அதிமுக எம்.எல்.ஏக்களின் டெல்லி பயணம் திடீர் ரத்து

தமிழக முதல்வராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய்து வருவதால் இதுகுறித்து புகார் அளிக்க அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் டெல்லி சென்று குடியரசு தலைவரிடம் முறையிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்&

அதிமுக வங்கிக்கணக்கை முடக்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்

தமிழக முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று வரை அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தார். ஆனால் நேற்றிரவு சென்னை மெரீனாவில் ஆழ்ந்த தியானத்திற்கு அவர் அளித்த பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது...

'கபாலி'க்கு பின் 'சி 3' படத்திற்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் &