பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்குகிறதா 'ராதே ஷ்யாம்? இயக்குனர் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,January 04 2022]

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் உள்பட அனைத்து துறைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக வேண்டிய ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் தள்ளிப் போனது என்பது தெரிந்ததே.

இருப்பினும் அஜித்தின் ‘வலிமை’ மற்றும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய திரைப்படங்கள் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ’ராதே ஷ்யாம்’ இயக்குனர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது மிகவும் கடினமான நேரத்தை நாம் சந்தித்து வருவதாகவும், இதயமே மிகவும் வலுவிழந்து உள்ளது என்றும் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமல் உள்ளோம் என்றும் இருப்பினும் மிகப்பெரிய நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் ’ராதே ஷ்யாம்’ படம் தள்ளிப் போவது குறித்த பதிவா இது? என கேட்டதற்கு ’ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதி தள்ளிப் போனால் நேரடியாக உங்களுக்கு நாங்கள் அதனை தெரிவிப்போம் என்று கூறியுள்ளார். இதிலிருந்து ’ராதே ஷ்யாம்’ திரைப்படம் தள்ளிப் போவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது.

பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைகிறாரா பிக்பாஸ் வருண்?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் வருண்

கோமா நோயாளிக்கு வயாகரா கொடுத்து காப்பாற்றிய சம்பவம்… நடந்தது என்ன?

இங்கிலாந்து நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால்

பிரபல நடிகையை வாட்ஸ் அப்பில் பிளாக் செய்த ரிஷப் பண்ட்… என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும் முன்னணி பேட்ஸ்மேனாகவும்

அந்த ரூ.3 லட்சம் பெட்டியை எடுத்து வெளியேறுவது நிரூப்பா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதும் இதில் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள்

பிக்பாஸ் அக்ஷராவுக்கு அண்ணன் கொடுத்த அன்பு பரிசு… வைரலாகும் புகைப்படம்!

பரப்பாக ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு