close
Choose your channels

'பக்கா கமர்ஷியல் படம்': கே.எஸ்.ரவிகுமார் பாராட்டிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, May 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ’பக்கா கமர்ஷியல் படம்’ என பாராட்டிய திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’டேக் டைவர்சன்’. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

ராம்ஸ், ஜான் விஜய், சிவகுமார், ஜார்ஜ் விஜய், காயத்ரி, ஸ்ரீனிவாசன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை சிவானி செந்தில் இயக்கியுள்ளார். ஜோஸ் பிராங்க்ளின் இசையில் ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவில், ஜீவா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தின் டிரைலரை பார்த்து மிகப்பெரிய அளவில் பாராட்டியதோடு இந்த படம் பக்கா கமர்சியல் படம் என்று பாராட்டியுள்ளார். கே எஸ் ரவிக்குமாரின் பாராட்டை அடுத்து இந்த படம் நிச்சயம் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.