ரோமியோ ஜூலியட்' படத்துக்கு நேர் எதிரானது 'போகன்' : லக்ஷ்மண்

  • IndiaGlitz, [Monday,June 13 2016]

கடந்த ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான 'ரோமியோ ஜூலியட்' படக்குழுவான ஜெயம் ரவி, ஹன்சிகா, இயக்குனர் லக்ஷமண் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படம் 'போகன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் லக்ஷ்மண் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

ரோமியோ ஜூலியட்' படம் ஜாலியான காதல் கதை. ஆனால் அதற்கு நேர் எதிரானது போகன். இதுவொரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றும் பார்வையாளர்களுக்கு வேறு மாதிரியான புது உணர்வை இந்த படம் ஏற்படுத்தும் என்றும் காக்கி சட்டைக்கு கவுரவம் சேர்க்கும் படமாக அமைந்துள்ள இந்த படத்தில் மெலிதான காமெடியும் உண்டு என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி ஆகிய இருவருமே கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடிக்கின்றனர். ஆனால் இருவருக்கும் ஒரே வேடம்தான். ஒரே வேடத்தில் இருவித குணாதிசியங்களை வெளிக்கொணரும் வேடங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். தாமரை, மதன்கார்க்கி, ரோகேஷ் இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர். பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

More News

10 படம் எடுக்கும் பட்ஜெட்டில் 'பாகுபலி 2' கிளைமாக்ஸ்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.600 கோடி வசூல் செய்தது. இன்னும் சீனா...

சார்லி ரீமேக்கில் விஜய்-மாதவன் இணைவார்களா?

சமீபத்தில் வெளியான துல்கர்சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது...

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. திரை முன்னோட்டம்

நடிகர், இசையமைப்பாளர் என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் அதுவும் வெற்றிகரமாக பயணம் செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் இன்று தனது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடி வரும் நிலையில்...

ராஜூமுருகனின் 'ஜோக்கர்' ரிலீஸ் தேதி?

பிரபல பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கிய 'குக்கூ' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றதை அடுத்து அவர் இயக்கி வந்த இரண்டாவது படமான 'ஜோக்கர்'...

அடுத்த கட்டத்திற்கு சென்றது கார்த்தியின் 'காஷ்மோரா'

கார்த்தி நடித்த 'தோழா' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்தி நடித்து வந்த அடுத்த படமான 'காஷ்மோரா'...